சுடச்சுட

    

    அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் மார்ச் 22-இல் கண்டன ஆர்ப்பாட்டம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 18th March 2016 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் நிதி நிறுவனம், வங்கி கடன் பிரச்னையில் விவசாயிகள் தற்கொலை நிலைக்குச் செல்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி முன் வரும் 22-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடன் நெருக்கடியாலும், தேசிய மயமாக்கப்பட்ட, வணிக வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் கடன் பாக்கி என்கிற பெயரில் விவசாயிகளின் டிராக்டர்கள், விவசாய இயந்திரங்களை பறிமுதல் செய்து, கெடுபிடி வசூலிலும் ஈடுபடுவதோடு விவசாயிகளை அவமானப்படுத்தியும்

    வருகிறார்கள். இதனால், மனமுடைந்து அரியலூர் மாவட்டம், ஒரத்தூரில் அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சோழன்குடிக்காடு கிராமத்தில் பாலா என்கிற பாஸ்கரன் வங்கியாளர்களாலும், காவல் துறையாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இப்பிரச்னையால் இன்னும் பல விவசாய குடும்பங்கள் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதை தடுக்க வலியுறுத்தியும், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அழகர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள், திரைப்பட கலைஞர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai