சுடச்சுட

  

  கலப்புத் திருமண தம்பதிகளைக் காக்க தனி நலத் துறை அமைக்க வலியுறுத்தல்

  By திருவாரூர்  |   Published on : 18th March 2016 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கலப்புத் திருமண தம்பதிகளை காக்க தனி நலத் துறை ஏற்படுத்த வேண்டுமென அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

  திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும், மார்ச் 23-ஆம் தேதி பகத்சிங் நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் இளைஞர் பெருமன்றம் சார்பில் கொடியேற்றி, பகத்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது.

  உடுமலைப்பேட்டையில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும்.

  சாதிவெறி, மதவெறி தீண்டாமை கொடுமைகளுக்கெதிராக சாதிய ஆணவக் கொலைக்கு முடிவு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது.

  கலப்புத் திருமண தம்பதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். கலப்புத் திருமண வாரிசுகளை சாதியற்றோர் என வகைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

  கலப்புத் திருமண வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கலப்புத் திருமண தம்பதிகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

  கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில், மாவட்டத் தலைவர் முகமதுஹசன்பசரி தலைமை வகித்தார். செயலாளர் முருகேசு, மாநில மாணவர் மன்ற முன்னாள் துணைச் செயலாளர் துரை.அருள்ராஜன், நிர்வாகி கு.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ் மற்றும் கோ.சரவணன், எஸ்.எம். சிவச்சந்திரன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai