சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 18th March 2016 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான பிரேம்குமார் திருத்துறைப்பூண்டியிலேயே முகாமிட்டு தேர்தல் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளார். 

  சென்னை- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலை, தஞ்சை, திருவாரூர், களப்பாள், பரவாக்கோட்டை சாலைகளில் தொடர்ந்து 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

  இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் கூறியது: ரூ.1லட்சத்துக்கு குறைவாக ரொக்கம் கொண்டுவருபவர்கள் 3 தினங்களுக்குள்ளாகவும், ரூ. 5லட்சம் வரை ரொக்கம் கொண்டுவருபவர்கள் 5 தினங்களுக்குள்ளாகவும், உரிய ஆவணங்களை செலுத்தி, தாங்கள் கொண்டுவந்த ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்றும், எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்குரிய ரசீதை வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai