சுடச்சுட

  

  திருவாரூரில் சாலையை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் பாடைகட்டி ஊர்வலம்

  By திருவாரூர்  |   Published on : 18th March 2016 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டி ஊர்வலமாகச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதில், புலிவலம் தொடங்கி திருநெய்ப்பேர் வரை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாலை சேதமடைந்தது.

  இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

  இந்நிலையில், மாங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புலிவலம் தொடங்கி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும் வியாழக்கிழமை பாடைகட்டி ஊர்வலம் நடத்தினர்.

  மாங்குடி கடைவீதியில் தொடங்கிய ஊர்வலம் கூடூர் கடைவீதி வரை நடைபெற்றது. பின்னர், அங்கு சாலை மறியல் போராட்டத்தில்

  ஈடுபட்டனர்.   இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதன் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai