சுடச்சுட

    

    தேசிய கால்பந்து போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு

    By திருவாரூர்  |   Published on : 18th March 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் திருநெய்ப்பேர் பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலத்தில், 19 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் பங்கேற்ற திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளி வீராங்கனை எஸ்.சுரேகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    மேலும், இதேப் பள்ளி வீராங்கனை எம்.பவித்ரா 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் இந்தியக் கால்பந்து அணியில் விளையாட பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, இந்த இரு வீராங்கனைகளையும் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் பாராட்டினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai