நாம் தமிழர் கட்சி தெருமுனைக் கூட்டம்
By மன்னார்குடி | Published on : 18th March 2016 05:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மன்னார்குடியில், நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.நாராயணசாமி உருவச் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் டி.பி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தீன்.முத்துச்செழியன், நகரச் செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மண்டலச் செயலாளர் தென்றல்.சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேதா ஏ.பாலமுருகன், மாவட்டப் பொருளாளர் கோ.கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வடுவூர் முருகேசன், ஒன்றியப் பொறுப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.