Enable Javscript for better performance
பாரத பண்பாட்டுத் தேர்வில் திருவாரூர் மாணவி சாதனை- Dinamani

சுடச்சுட

    

    பாரத பண்பாட்டுத் தேர்வில் திருவாரூர் மாணவி சாதனை

    By திருவாரூர்  |   Published on : 18th March 2016 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீராமகிருஷ்ணா விவேகானந்த சேவாஸ்ரம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதப் பண்பாட்டுத் தேர்வில் திருவாரூர் அரசுப்பள்ளி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    திருவாரூர் ஸ்ரீராமகிருஷ்ணா விவேகானந்த சேவாஸ்ரம் சார்பில் 2015-2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான பாரத பண்பாட்டுத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருவாரூர் அருகே உள்ள விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி இ.சாரபானு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். தேர்வுப் பெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் க.முத்துலட்சுமி, ஆசிரியர் சசிகலா, நல்லாசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai