சுடச்சுட

    

    மன்னார்குடி ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஊழியர் சடலம்

    By மன்னார்குடி  |   Published on : 18th March 2016 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி ரயில் நிலைய தண்டவாளத்தில், தலை துண்டித்த நிலையில் ரயில்வே மின்சாரப் பணியாளர் உடல் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், அந்த தண்டவாளத்தில் கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயிலுக்கான எஞ்சினை கொண்டு வந்து நிறுத்த முயன்றபோது, தண்டவாளத்தில் தலை துண்டிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதை எஞ்சின் ஓட்டுநர் பார்த்தார். இதுகுறித்து அவர் ரயில் நிலைய அலுவலகத்துக்கு தகவல் அளித்தார்.

    நிகழ்விடத்துக்கு வந்த நிலைய அலுவலர் மனோகரன், சடலமாக கிடந்தவரைப் பார்த்தபோது, ரயில் நிலைய மின்சாரப் பணியாளரான பாலசுப்ரமணியன் எனத் தெரிய வந்தது. இவர் திருச்சி மாவட்டம், பிச்சாண்டவர் கோயில், மங்களாபுரம்,கோபால் மகன் பாலசுப்ரமணியன் (35) ஆவார்.  திருமணமாகாதவர். திருச்சியிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பணியிட மாறுதல் பெற்று, மன்னார்குடி வந்துள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் மன்னார்குடிக்கு வந்து, பாலசுப்ரணியத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலசுப்ரமணியன் தவறி விழுந்ததில் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai