சுடச்சுட

    

    லாரி மோதி உயிரிழந்தவரின் மகனுக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By திருவாரூர்  |   Published on : 18th March 2016 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரி மோதி உயிரிழந்தவரின் மகனுக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு திருவாரூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    குடவாசல் அருகே உள்ள மேலராமன்சத்தியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் எடிசன்(25). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஜீவிதன்(5) என்ற மகன் உள்ளார். ரேவதி உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி, எடிசன் தனது நண்பர்களுடன் வெள்ளமண்டபம் மாதா கோயில் தேர்த் திருவிழாவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் மீது அவ்வழியே வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி எடிசன் இறந்தார்.

    இந்த விபத்து குறித்து குடவாசல் காவல் நிலையப் போலீஸார் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி விபத்தில் உயிரிழந்த எடிசனின் மகன் ஜீவிதனுக்கு படிப்பு மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு லாரியை காப்பீடு செய்த தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai