சுடச்சுட

    

    வெளி மாநில மதுப்புட்டிகள் விற்கப்படுவதாகப் புகார்

    By நீடாமங்கலம்  |   Published on : 18th March 2016 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் பகுதியில் வெளிமாநில மதுப்புட்டிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. போலீஸார் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் வெளி மாநில மதுப்புட்டிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும்  புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், சில அரசியல் கட்சியினரே ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai