சுடச்சுட

    

    இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர் கைது

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டியில் காதலித்து திருமணம் செய்த முதல் மனைவியை கைவிட்டு, இரண்டாவது திருமணம் செய்யமுயன்றவரை மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி தோப்படித் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் தசரதசக்கரவர்த்தி (29). இவர், பழயங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் அகிலாவை (23)காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். தற்போது அகிலா 3 மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்நிலையில், தசரதசக்கரவர்த்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் பெண்ணை வருகிற 25-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளாராம். இதற்காக திருமண அழைப்பிதழும் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதையறிந்த அகிலா,  தசரதசக்கரவர்த்தி வீட்டின் முன்பாக வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

    இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி வழக்குப் பதிந்து, தசரதசக்கரவர்த்தியை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai