சுடச்சுட

  

  மன்னார்குடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

  கோட்டூர் அருகே உள்ள அக்கரைக்கோட்டகம், கீழத் தெரு, பழனிவேல் மகன் ஆனந்த் (25). இவர், வாஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, உடன் வேலை பார்த்த முருகன் மகள் நித்யாவை (23) காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நித்யா வீட்டில் இவர்களது காதலை ஏற்கவில்லை. ஆனால், ஆனந்த் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த்- நித்யா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

  இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாம். மார்ச் 17-ஆம் தேதி நித்யா தனது பெற்றோரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் வரதட்தணைக் கேட்டு தன்னை துன்புறுத்துவதாகத் தெரிவித்தாராம்.

  இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நித்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

  திருக்களர் போலீஸார், நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து நித்யாவின் பெற்றோர் திருக்களர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, ஆனந்தை கைது செய்தனர்.

  தற்கொலை செய்துகொண்ட நித்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், மன்னார்குடி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai