சுடச்சுட

  

  திருவாரூர் அருகே சாலையை சீரமைக்கக் கோரி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலத்திலிருந்து மாவூர் வரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பதால், அந்தச் சாலையை சீரமைக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் அருகே மாங்குடியில் வியாழக்கிழமை நூதன முறையில் பாடை கட்டி ஊர்வலமாகச் சென்று, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

  இந்தப் போராட்டத்தால் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 70 பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai