சுடச்சுட

    

    நீடாமங்கலம் கீழத்தெருவில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வழிபட்ட வரலாற்றுச் சிறப்பிற்குரிய இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவேறி கடந்த 14-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 9.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலஸ்தான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், ஸ்ரீசந்தான ராமசுவாமி கைங்கர்ய சபாவினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai