சுடச்சுட

  

  திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட காங்கிரஸ் முடிவு

  By திருவாரூர்  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு தீவிரமாகப் பாடுபடுவது என்று, காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

  திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற நகர காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும், திருவாரூர் நகரில் புதைச் சாக்கடை பல இடங்களில் பழுதடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, புதைச் சாக்கடை பணிகளை முழுமையாகச் சீரமைக்க வேண்டும்.

  மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப போதுமான இடவசதி இல்லாமல் தற்போதைய பேருந்து நிலையம் உள்ளது. எனவே, புதிய பேருந்து நிலையப் பணியை விரைவுப் படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நகரில் வாக்குச்சாவடி முகவர்களை உடனடியாக நியமிப்பது உள்ளிட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்துக்கு, நகரத் தலைவர் எம். சம்பத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், திருவாரூர் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் பாலாஜி, அன்பு வீரமணி, சம்மந்தம், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், சக்திசெல்வகணபதி, குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai