சுடச்சுட

    

    தியாகராஜ சுவாமி கோயிலில் மார்ச் 23-இல் பாத தரிசனம்

    By திருவாரூர்  |   Published on : 19th March 2016 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மார்ச் 23-ஆம் தேதி பாத தரிசனம் நடைபெறுகிறது.

    சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா பிப்.24-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

    பிப்.26-ஆம் தேதி கொடியேற்றும் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பதஞ்சலி வியாக்ரபாத மகரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி மார்ச் 23-ஆம் தேதி காலை 6 மணிக்கு  நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai