சுடச்சுட

    

    தேர்தல் பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, நல்ல உடல்நிலையில் உள்ள, திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தல் பணியாற்ற வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தேர்தல் பணியாற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.

    எனவே, விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படைஅலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டட வளாகத்தில், அறை எண். 201-204-இல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வாரத்தின் அனைத்து நாள்களிலும் (சனி,ஞாயிறு உள்பட) நேரில் அணுகி எழுத்து மூலமான விருப்பக் கடிதத்தினை அளிக்கலாம். தவிர 04366-220210 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai