Enable Javscript for better performance
மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

    By மன்னார்குடி  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் ஆட்டோ பேரணியின் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மன்னார்குடி தேரடிதிடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மன்னார்குடி கோட்டாட்சியர் ச.செல்வசுரபி தலைமை வகித்து,  ஆட்டோ பேரணியைத் தொடங்கி வைத்தார். மன்னார்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார்.

    இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களுக்கான உரிமை, கடமைகளை விளக்கும் வாசகங்கள் அடங்கியப் பதாகைகள் எடுத்து வரப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    தேரடியில் தொடங்கிய ஆட்டோ பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, வ.உ.சி.சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மன்னார்குடி வட்டாட்சியர் எஸ்.கோவிந்தராஜன், மன்னார்குடி நகர்மன்ற ஆணையர் (பொ) ச.மணி, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai