Enable Javscript for better performance
மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்: ஆட்சியர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்: ஆட்சியர் வழங்கினார்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சனம், பழையங்குடி ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றோர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டுமென்ற உறுதிமொழி துண்டுப் பிரசுரத்தை மாணவ- மாணவிகளிடம் ஆட்சியர் எம்.மதிவாணன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

    கச்சனம் அரசு உயர்நிலைப்பள்ளி, கச்சனம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பழையங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் வாக்குப்பதிவு மையம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட்டு,அங்கு மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தள வசதி உள்ளதா என்பதையும், குடிநீர், மின்சார வசதிகள் உள்ளதா? என்பதையும் ஆட்சியர் மதிவாணன் ஆய்வு செய்தார்.

    அப்போது, கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மாணவ- மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து உணர்த்தும் வகையிலான உறுதிமொழி துண்டுப் பிரசுரத்தை மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, ஆட்சியர் தலை மையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

    18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பது என்பது அவர்களின் கடமையாகும். மாணவ-மாணவிகளிடம் வழங்கப்பட்டுள்ள இந்த உறுதிமொழி துண்டுப் பிரசுரங்களை அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் காண்பித்து, அதில் கையெழுத்து பெற்று, பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து, பெற்றோர்கள் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்றார் ஆட்சியர்.

    இந்நிகழ்வில், கூடுதல் மாவட்டத் தேர்தல் அலுவலர் டி.மோகன்ராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத்  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார், முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாராயணன், நபார்டு வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், வட்டாட்சியர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, ஆப்பரக்குடி பகுதியில் பறக்கும் படையின் மேற்கொண்ட வாகனச் சோதனைப் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai