சுடச்சுட

    

    முத்துப்பேட்டை வர்த்தகக் கழகக் கூட்டம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டை வர்த்தகக் கழகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    சங்கத் தலைவர் இரா.ராஜாராம் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் இரா.திருஞானம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மெட்ரோ மாலிக் வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் செயல் அறிக்கை குறித்து பேசினார். கூட்டத்தில், கடந்த 15-ஆம் தேதி முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பாக வர்த்தகக் கழகப் பொருளாளர் மு.முகைதீன் பிச்சையைத் தாக்கியவர்களை, முத்துப்பேட்டை போலீஸார் வருகிற 21-ஆம் தேதிக்குள் கைது செய்யவேண்டும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வருகிற 22-ஆம் தேதி முத்துப்பேட்டையில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், துணைத் தலைவர் நெய்னா முகம்மது, துணைச் செயலாளர் பழனித்துரை, செயற்குழு உறுப்பினர்கள் ஹைதர் அலி, அசோகன், சகாபுதீன், பாலகுமார், ராஜேஷ் கண்ணா, பன்னீர் செல்வம், செல்வம், ராமு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai