சுடச்சுட

  

  "வாழ்வியல் நெறிகளை கூறும் சங்க இலக்கிய நூல்களைப் படிக்க வேண்டும்'

  By திருவாரூர்  |   Published on : 19th March 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறும் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.சிவஞானம் கூறினார்.

  திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான குடியுரிமைப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசியது:

  மனித சமூகம் எப்படி வாழவேண்டும், எப்படி வாழக் கூடாது என்று ஒன்னே முக்கால் வரியில் வாழ்க்கை நெறிகளைக் கூறியுள்ள திருக்குறளையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும், அறம் சார்ந்த அறநெறிக் கருத்துகளையும் முக்காலத்துக்கும் பொருத்தக் கூடிய உண்மைகளை விளக்கிக் கூறியுள்ள கம்பராமாயணத்தையும், அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற வாழ்வியல் தத்துவத்தை கூறும் சிலப்பதிகாரப் பதிகம் உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களை மாணவர்கள் அவசியம் படித்து தங்களது வாழ்க்கை முறையை அறம் சார்ந்த வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

  ஆசிரியர் பணி அறப்பணி. இப்பணியை எதிர்காலத்தில் ஆற்ற வரும் ஆசிரியர்கள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும். சமுதாயப் பார்வையுள்ள மாணவர்களை உருவாக்குவது ஆசிரியரின் கடமை என்றார் நீதிபதி ஏ.சிவஞானம்.

  முகாமில் பங்கேற்று ரத்ததானம் வழங்கிய கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு நீதிபதி சிவஞானம் சான்றிதழ்கள் வழங்கினார்.

  விழாவில் கல்லூரி நிர்வாகி கே.எஸ்.எஸ். தியாகபாரி, செயலர் செந்தூர்பாரி, கல்விக் குழு உறுப்பினர் சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai