Enable Javscript for better performance
கதவு விழுந்து குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே கதவு பெயர்ந்து விழுந்து ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

    திருவாரூர் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜூ (31). இவரது மனைவி ராசாத்தி (25). இவர்களது ஆண் குழந்தை ஹரிஸ் (2). ராசாத்தி கதவு அருகில் அமர்ந்து கொண்டு, ஹரிஸுக்கு உணவு ஊட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மரக்கதவு பெயர்ந்து குழந்தை ஹரிஸ் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த ஹரீஸ் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai