சுடச்சுட

    

    சாதிமறுப்பு திருமண தம்பதி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By திருவாரூர்  |   Published on : 20th March 2016 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, திருவாரூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாற்றத்துக்கான மக்கள் களம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளைக் காக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், ஆணவக் கொலையைத் தடுப்பதில் தமிழக அரசின் மெத்தனச் செயல் கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.

    மாற்றத்துக்கான மக்கள் கள ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மகேந்திரன், காந்தி, காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai