சுடச்சுட

  

  நீடாமங்கலம் அருகே தந்தை, தம்பியைத் தாக்கியவரை  போலீஸார் கைது செய்தனர்.

  நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (57) இளநீர் வியாபாரி. இவரது மகன் ஜோதிபாசு (32) மரம் ஏறும் தொழாலாளி. ஜோதிபாசு 18-ஆம் தேதி தனது தந்தை லட்சுமணனிடம் வட்டிக்குப் பணம் வாங்கித்தர சொன்னாராம். ஏற்கெனவே வாங்கித்தந்த பணத்தை திரும்பச் செலுத்தவில்லை என்பதால் மீண்டும் பணம் வாங்கித்தர முடியாது என அவர் மறுத்தாராம். இதனால், ஆத்திரமடைந்த ஜோதிபாசு அரிவாளால் லட்மணனைத் தாக்கினாராம். இதைத் தட்டிக்கேட்ட தனது தம்பி இளவரசனையும் (23) ஜோதிபாசு தாக்கியதாகத் தெரிகிறது.

  இதுகுறித்து இளவரசன் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் அறிவழகன் வழக்குப்பதிந்து, ஜோதிபாசுவை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai