சுடச்சுட

    

    பேச்சுப்போட்டியில் திருவிக கல்லூரி மாணவருக்கு பரிசு

    By திருவாரூர்  |   Published on : 20th March 2016 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழா பேச்சுப் போட்டியில், திருவாரூர் திருவிக கல்லூரி மாணவர் முதல் பரிசு பெற்றார்.

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் உமறுப் புலவர் தமிழ்ப் பேரவை, கலை மற்றும் நுண்கலைக்குழு சார்பில் அண்மையில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலைப் போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டியில், திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பிரிவில் இறுதியாண்டு மாணவர் த.க.தமிழ்பாரதன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவருக்கு ரூ.1,500 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. கவிஞர் நந்தலாலா இப்பரிசை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai