Enable Javscript for better performance
பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சகோதரிகள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சகோதரிகள் இருவர் கைது

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 20th March 2016 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பேருந்தில், மூதாட்டியிடம் 5சவரன் நகைகளைப் பறித்த, சேலம் சகோதரிகள் இருவரை எடையூர் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செம்பியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி மனைவி அன்னபூரணி (68). இவர், கண் பரிசோதனைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, தனியார் பேருந்தில் திருத்துறைப்பூண்டிக்கு திரும்பினார்.  பாண்டிச்சத்திரம் நிறுத்தத்தில் அன்னபூரணி இறங்கும்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதனால், அந்தப் பேருந்தை எடையூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் உள்ள பயணிகளிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பேருந்தில் இருந்த சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சிவராமன் மனைவி சுவாதி(36), இவரது சகோதரியான வேல்பாண்டி மனைவி கண்ணம்மா (32) ஆகிய இருவரும் அன்னபூரணியிடம் நகையைத் திருடியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நகையும் மீட்க்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai