Enable Javscript for better performance
மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் மக்கள் நலக் கூட்டணியின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில், மார்ச் 29,31 ஆகிய தேதிகளில் ஒன்றிய அளவிலான மக்கள் நலக் கூட்டணியின் ஊழியர்கள் கூட்டம் நடத்துவது, வாக்குச்சாவடி வாரியாக குழு அமைப்பது,  வீடுவீடாகச் சென்று மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் குறித்து விவரிப்பது, துண்டு பிரசுரம் விநியோகிப்பது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்து கண்காணிப்பது, பகுதி வாரியாக மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பணிக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் வை.செல்வராஜ் (சிபிஐ), பி.பாலசந்திரன் (மதிமுக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ம.வடிவழகன் (வடக்கு), வி.ச.செல்வன் (தெற்கு)  மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மாசிலாமணி, சந்திரசேகர ஆசாத், மாரியப்பன், சீனிவாசன், ஜெயராமன், கமலவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai