சுடச்சுட

    

    மன்னார்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்த கணவரை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    மன்னார்குடியை அடுத்த எடையர் எம்பேத்தி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவரது மனைவி மாலதி (40), மகன் சிவா (18). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் கேபிள் நிறுவனத்தில் வேலை செய்துவந்த சிவா, கேபிள் வயர் சரி செய்வதற்காக மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

    மகன் இறந்ததால் அதிக மதுப்பழக்கத்துக்கு ஆளானகணேசன், போதையில் அடிக்கடி மாலதியிடம் தகராறு செய்துவந்தாராம். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மதுப்போதையில் வீட்டுக்கு வந்த கணேசன், திடீரென மாலதியின் மீது  மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்தாராம். இதில் காயமடைந்த மாலதி மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, கணேசனை சனிக்கிழமை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai