சுடச்சுட

    

    மாவட்ட சுகாதாரப் பிரிவில் நிரந்தரத் துணை இயக்குநர் நியமிக்க கோரிக்கை

    By நீடாமங்கலம்  |   Published on : 20th March 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் சிறப்பாக நடைபெற திருவாரூர் மாவட்டத்திற்கென நிரந்தரத் துணை இயக்குநரை நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஐ.வி.நாகராஜன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால், கிராமப்புறங்களிலிருந்து வரும் பெரும்பாலான ஏழை- எளிய நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

    கடந்த காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறுக்கென சிறப்பு அறுவைச் சிகிச்சை மையகள் செயல்பட்டு வந்தன.

    இந்த மையங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.  இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளை மேற்கொள்ளும் மாவட்டத் துணை இயக்குநர் பணியிடம் காலியாகவுள்ளது. தாற்காலிகமாக தஞ்சை மாவட்ட துணை இயக்குநர், திருவாரூர் மாவட்டத்துக்கு பொறுப்பாக இருந்து வருகிறார்.

    நிரந்தரத் துணை இயக்குநர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரப் பணிகளை முழுமையாகக் கண்காணிக்க இயலாத நிலைவுள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் துணை இயக்குநர் நியமித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai