சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு

    By மன்னார்குடி  |   Published on : 20th March 2016 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து, மூன்று பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

    கீழப்பாலம், திருத்துறைப்பூண்டிச் சாலை, காவிரி நகரைச் சேர்ந்தவர் ரா.பானுமதி. இவர் மார்ச் 9-ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். சனிக்கிழமை (மார்ச் 19) காலையில் அவர் தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் மன்னார்குடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    நிகழ்விடத்துக்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் மு.கழனியப்பன், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த மூன்று பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, திருவாரூரிலிருந்து மோப்பநாய் மெர்சி வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் கை ரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். இது குறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai