சுடச்சுட

    

    வெளிமாநில மதுப்புட்டிகள், எரிசாராயம் பறிமுதல்: சகோதரர்கள் கைது

    By  மன்னார்குடி  |   Published on : 20th March 2016 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில், இருசக்கர வாகனங்களில் வெளிமாநில மதுப்புட்டிகள், எரிசாராயம் கடத்திய சகோதரர்கள் இரண்டு பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி காவல் ஆய்வாளர் மு.கழனியப்பன் தலைமையில் போலீஸார், மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடைக்குள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 89 மதுப்புட்டிகளும், ஒரு கேனில் பத்து லிட்டர் எரிசாராயத்தையும் மறைத்து வைத்து, கடத்தி வருவது தெரியவந்தது.

    இதையடுத்து, இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி சாலையைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன்கள் ஜெயபால் (50), ஜெயசந்திரன் (48) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்திவந்த மதுப்புட்டிகள், எரிச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai