சுடச்சுட

  

  பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் ஞாயிற்றுக்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  நீடாமங்கலம் காவல் சரகம், கோவில்வெண்ணி வடக்குத் தெரு கணேசன் மகன் சுரேஷ்குமார் (26). ஆதனூர் மண்டபம் சமத்துவப்புரம் மருதமுத்து மகன் சரத்குமார் (24), கோமல் ராதாநஞ்சை முருகேசன் மகன் வினோத்குமார் (26) ஆகியோர் அந்தந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

  காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மூவரையும் நீடாமங்கலம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்

  மூவரையும் ஞாயிற்றுக்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai