சுடச்சுட

  

  திருவாரூரில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  ஈஸ்டர் விழாவின் முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாகக் கடைபிடிக்கப்படுகிறது. இயேசுவை அரசராக போற்றி ஜெருசலத்தில் குருத்தோலை ஏந்தி பெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த நாளை நினைவு கூரும் வகையில், உலகம் முழுவதும் குருத்தோலை ஊர்வலம், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  அதன்படி திருவாரூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி தெற்கு வீதி, அண்ணா சாலை, பனகல் சாலை, கீழக்கு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

  புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai