சுடச்சுட

  

  நுகர்வோர் குறைதீர் ஆணைய கிளை திருச்சியில் தொடங்கக் கோரிக்கை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 21st March 2016 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தின் மாநில குறைதீர் ஆணையத்தின் கிளையை திருச்சியில் தொடங்க வேண்டுமென திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் கிரியேட் நுகர்வோர் அமைப்பின் சார்பில்,  உலக நுகர்வோர் தினவிழா எம்.ஜெயானந்தன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் வரதராஜன் முன்னிலை வகித்தார். விழாவில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் கிரியேட் நுகர்வோர் அமைப்பின் செயலர் நெல்.ஜெயராமன் பேசியதாவது:

  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஒருவர் பாதிக்கப்பட்டால் தவறு செய்தவர்களுக்குத் தண்டனையும் அபராதமும் விதிப்பதோடு, பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடும், வழக்குச் செலவும் வழங்க வழிவகை செய்துள்ளது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாகும்.

  மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் என மூன்றடுக்கு முறையில் குறைதீர் மன்றங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தின் மாநில குறைதீர் ஆணையத்தின் கிளையை திருச்சியில் தொடங்க வேண்டும் என்றார்.

  நிகழ்ச்சியில் கிரியேட் கள அலுவலர் சுரேஷ்கண்ணா, பல்வேறு நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த எஸ்.வடிவழகன், வி.மணியன், கே.கார்த்திகேயன், செந்தில், ஜெயராமகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai