சுடச்சுட

  

  முள்ளாச்சி மாரியம்மன் கோயில்தீமிதித் திருவிழா

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 21st March 2016 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீ மிதித்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கோயிலில் கடந்த மார்ச் 6-இல் ஸ்ரீ முள்ளாச்சி மாரியம்மனுக்கு பூச்சொரிதல், காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அர்ச்சகர் காப்பு அணிவித்தார். காப்புக் கட்டிய பக்தர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தனர். விழா நாள்களில் முள்ளாச்சி மாரியம்மன் அன்ன வாகனம், புஷ்ப, மயில் வெள்ளி காமதேனு, யானை, கிளி, சிம்ம வாகனம் புஷ்ப பல்லக்கிலும், 19-ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் பக்தர்கள் மாவிளக்கு, முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக் கடனை செலுத்தினர்.

  மாலை 6 மணிக்கு 1,500-க்கும் மேற்பட்டோர் அக்னி குண்டத்தில் இறங்கினர். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் தலைமையில் காவல் துணைக் காணிப்பாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  போக்குவரத்து மாற்றம்: விழாவையொட்டி நாகை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நாகை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை சாலை, கிழக்குக் கடற்கரை வேதாரண்யம் புறவழி பிரிவு சாலை வழியாக விடப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் மு.பாஸ்கரன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கோ.சண்முகசுந்தரம், மேலாளர் சீனிவாசன், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai