சுடச்சுட

    

    வியாபாரிகளை மிரட்டி பறக்கும் படை பணம் பறிப்பதாகக் குற்றச்சாட்டு

    By நீடாமங்கலம்  |   Published on : 21st March 2016 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வியாபாரிகளை மிரட்டி தேர்தல் பறக்கும் படையினர் பணம் பறிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

    வைரவிழா காணும் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கப் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத் தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் எல்.செந்தில்நாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி, நாகை மாவட்டத் தலைவர் ஏ.டி.எஸ்.தமிழ்ச்செல்வன், வர்த்தகர் சங்க நீடாமங்கலம் துணைத் தலைவர் ஏ.முகமது அஜிசுல்லலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் வர்த்தகர் சங்கச் செயலாளர் ஜி.வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் வர்த்தகர் சங்க புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்  தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா பேசியது:

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினரால் ரூ. 8 கோடிக்கு மேல் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ. 6 கோடி வணிகர்களின் பணமாகும். வியாபாரிகளை மிரட்டி பறக்கும் படையினர் பணம் வசூலிக்கின்றனர்.

    சிறு வியாபாரிகள் பணத்தை ரொக்கமாக எடுத்துச் சென்றால்தான் பொருள்களை கொள்முதல் செய்து மறுநாள் காலையில் விற்பனை செய்ய முடியும். இதைக்கூட அதிகாரிகள் உணரவில்லை.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்வு காண்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் வணிகர்களுக்கு எதிராகவுள்ளது என்றார்.

    விழாவில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.ராஜசேகரன், நீலன் மெட்ரிக் பள்ளித் தாளாளர் நீலன்.அசோகன், வர்த்தகர் சங்க முன்னாள் செயலாளர் கே.சூரியகுமார், முன்னாள் பொருளாளர் டி.அசோகன், கும்பகோணம் சத்திய நாராயணன், மன்னார்குடி வர்த்தகர் சங்கம் ஞானசேகரன், பாபுமனோகரன் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

    வர்த்தகர் சங்க துணைச் செயலாளர் ஜி.சேகர் நன்றி கூறினார். விழாவையொட்டி அனைத்து வர்த்தகர்களும் கடையடைப்பு செய்திருந்தனர்.

    இணக்கமான கட்சிக்கு ஓட்டு: முன்னதாக ஏ.எம்.விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: வணிகர்களுக்கு இடையூறு விளைவிக்கும் பல்வேறு சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வந்துள்ளன. குறிப்பாக மின் வர்த்தகம் (இ.நெட்) மூலம் கணக்குகளை சமர்ப்பித்து வரிகளைச் செலுத்துவது சாதாரண வியாபாரிகளால் இயலாத காரியமாகும். இது வணிகர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதை எதிர்த்து தேர்தலின்போது போராட்டங்களை நடத்தும் சூழ்நிலை இல்லை. வணிகர்களுக்கு மிகவும் இணக்கமானவர்கள் யார்? என்பதை உணர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வணிகர்கள் வாக்களிப்பர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai