சுடச்சுட

  

  முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில், செவ்வாய்க்கிழமையன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கடையடைப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

  முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு கடந்த 15-ஆம் தேதி வர்த்தகக் கழகப் பொருளாளர் மு.முகைதீன் பிச்சையைத் தாக்கி குற்றவாளியை முத்துப்பேட்டை போலீஸார் 21-ஆம் தேதிக்குள் உடனடியாக கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 22-ஆம் தேதி முத்துப்பேட்டையில் கடை அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என்று வர்த்தகக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

  இந்த நிலையில், திங்கள்கிழமை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கடை அடைப்புப் போராட்டம் குறித்து சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

  இதில் கழகத்தின் கெளரவத் தலைவர் இரா.திருஞானம், தலைவர் இரா.ராஜாராம், பொதுச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் மெட்ரோ மாலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  காவல் துறை தரப்பில் இன்னும் சில தினங்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, வர்த்தகக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த கடையடைப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai