சுடச்சுட

    

    தனியார் பேருந்து நடத்துநரை தாக்கியவர் கைது

    By திருவாரூர்  |   Published on : 22nd March 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    மன்னார்குடியிலிருந்து திருவாரூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் பேருந்து வந்தது. பேருந்தில் நடத்துநரான மன்னார்குடி அருகே நாகங்குடியைச் சேர்ந்த இலக்கியதாஸ் (27) பணியில் ஈடுபட்டிருந்தார். பேருந்து சிங்களாஞ்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் இளைஞர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் வந்துள்ளார். இதையறிந்த நடத்துநர், பயணச் சீட்டு எடுக்குமாறு இளைஞரிடம் கூறியுள்ளார்.

    இளைஞரும் பயணச்சீட்டு எடுக்க மறுத்துள்ளார்.

    இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர் நடத்துநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இளைஞர் திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீஸாரின் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் திருவாரூர் அருகே ஆண்டிப் பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai