சுடச்சுட

  

  திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை:பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 22nd March 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் -காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் சுணக்கமான நிலையில் இருந்து வருவதைத் துரிதப்படுத்தி உடனடியாக பணிகளை முடிக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் குடவாசல் தினகரன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

  சென்னை-காரைக்குடி ரயில்பாதை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு சென்னையில் இருந்து ராமேசுவரம், காரைக்குடி, மானாமதுரை ஆகிய ஊர்களுக்கு கம்பன், போட்மெயில், சேது, ராமேஸ்வரம், மானாமதுரை ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

  இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை,திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட மக்கள் சென்னைக்கு நேரடி ரயில் வசதியைப் பெற்றிருந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் } மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், மாவூர், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை செல்ல நேரடி ரயில் வசதி இன்றி அவதியடைந்து வருகின்றனர்.

  இதற்கிடையே சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இடையிலான மொத்தம் 450 கி.மீ தொலைவில் இதுவரை திருவாரூர் வரையிலான 300 கி.மீ தொலைவுக்கு மூன்று கட்டமாக வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன.

  இந்நிலையில், அடுத்த கட்டமாக 301-ஆவது கி.மீட்டராக திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான பணிகளைத் தொடங்காமல், தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் பணியை செய்து வருகிறது.

  அதாவது காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 78 கி.மீ. தொலைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

  இதனால் எந்த ரயில் சேவையும் கிடைக்காது என தெரிந்தும் இந்தப் பாதையை அரசியல் முட்டுக்கட்டைகள் காரணமாக ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.

  தற்போதைய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்திற்கு மட்டும் ரூ. 35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவாரூர்-காரைக்குடி வழித்தடம் அகலப் பாதையாக மாற்றம் செய்யப்படாத நிலையில், இப்புதிய வழித்தடங்களுக்கு இணைப்புக் கிடைக்க வழி ஏற்படாது.

  எனவே, மத்திய ரயில்வே அமைச்சராகிய தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடவாசல் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai