Enable Javscript for better performance
தொழிலாளி சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை அருகே குளத்தில் மிதந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

    முத்துப்பேட்டை மேலநம்மங்குறிச்சி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் குணசேகரன் (32). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தநாயகி. திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

    இருவருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்தநாயகி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    இந்த நிலையில், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள வெள்ளக்குளத்தில் குணசேகரனின் சடலம் மிதந்தது.

    தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி

    வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai