சுடச்சுட

  

  மாணவர்கள் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்

  By திருவாரூர்,  |   Published on : 22nd March 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலில் மாணவர்கள் வாக்களித்து தங்களது நாட்டுக்கு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

  பேரவைத் தேர்தல் குறித்து திருவாரூர் ராபியம்மாள் அஹமது மெய்தீன் பெண்கள் கலைக் கல்லூரியில் மாணவிகளிடையே திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

  18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்களிப்பது ஜனநாயக கடமை. மாணவ, மாணவிகள் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் குறித்து எந்தந்த படிவங்கள் உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டுமென்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  வாக்குகளை விலைக்கு விற்காமல் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதே நம் நாட்டுக்கு செய்யும் கடமை என்பதை மாணவ, மாணவிகள் அறிவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

  வாக்காளர்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்களது தார்மீக உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாக்களிப்பது நல்ல மக்களாட்சியை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்றார் மதிவாணன்.

  முன்னதாக ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, வட்டாட்சியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai