சுடச்சுட

    

    வாக்காளர் விழிப்புணர்வு விடியோ படக்காட்சி ஒளிபரப்பு

    By திருவாரூர்  |   Published on : 22nd March 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை தனியார் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு விடியோ படக்காட்சி ஒளிபரப்பட்டது.

    2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி, அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கவும், வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இப்பிரசாரங்கள் தொலைக்காட்சி, தேர்தல் ஆணைய இணைய தளம், குறுந்தகவல், பேரணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மின்னணு விடியோ வாகனம் மூலம் விடியோ படக்காட்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இப்படக் காட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கும் விளம்பரங்கள், படத்தொகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.

    மேலும் மனசாட்சிப்படி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை பார்வையிட்டு, உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், குறித்த குறும்படங்களும், படித்திருந்தாலும், நகர்ப்புற வாக்காளர்கள் வாக்களிக்க முன்வராவிட்டால் அது தவறு என்பது குறித்தும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு படங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்விழிப்புணர்வு படக்காட்சியைக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பார்த்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டுமென்றார்

    மதிவாணன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai