சுடச்சுட

    

    திருவாரூர் அருகே டிராக்டர் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

    திருவாரூர் அருகே கோமல் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் செந்தில் (19), உத்திரங்குடியைச் சேர்ந்த குமார் மகன் செல்லப்பா (19). இருவரும் சமையல் தொழிலாளர்கள்.

    இருவரும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு கோமல் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த டிராக்டர் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த செல்லப்பா அதே இடத்தில் உயிரிழந்தார். செந்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநர் கோமலைச் சேர்ந்த செல்லதுரையை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai