சுடச்சுட

  

  மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து கல்லூரி மாணவர்கள் சந்திப்பு பிரசாரம்

  By திருவாரூர்  |   Published on : 23rd March 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவர்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய மக்கள் நலக்கூட்டணி கட்சியின் மாணவர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது.

  மக்கள் நலக்கூட்டணி கட்சியின் மாணவர்கள் அமைப்புகளான மறுமலர்ச்சி திமுக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (சி.பி.ஐ), இந்திய மாணவர் சங்கம் (சி.பி.எம்.), முற்போக்கு மாணவர் கழகம் (வி.சி.க.) அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில், மக்கள் நலக்கூட்டணி கட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அம்சங்களான சமூகநீதி, மதநல்லிணக்கம், தேசப்பற்று, பாலியல், சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

  கல்வி தனியார்மயமாக்கப்படுவது தடுக்கப்படும், தாய்மொழி கல்விக்கு ஊக்கமளிக்கப்படும், ஒரே சீரான கல்வி முறை கொண்டுவரப்படும், மதுவிலக்கை அமல்படுத்தப்படும், லஞ்ச ஊழலுக்கு முடிவுகட்டப்படும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துக் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவர்களைச் சந்தித்து பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai