சுடச்சுட

  

  முத்துப்பேட்டையில் குடிசை தீக்கிரை

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 23rd March 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டை அருகே மின்கசிவின் காரணமாக செவ்வாய்க்கிழமை குடிசை வீடு தீப்பற்றியதில் முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது.

  தம்பிக்கோட்டை மேலகீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன்(53).

  இவர் வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் மின்கசிவின் காரணமாக வீட்டில் தீப்பிடித்தது.

  தகவலின்பேரில் முத்துப்பேட்டை தீயணைப்பு அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் வீரர்கள் தீயை அணைத்தனர்.

  அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் சென்று பார்வையிட்டனர்.

  இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai