சுடச்சுட

    

    விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு :நீதிமன்றம் உத்தரவு

    By திருவாரூர்  |   Published on : 23rd March 2016 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சோழாச்சேரி நாகங்குடியைச் சேர்ந்தவர் ஜீவா (48). இவர் கொரடாச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 17.3.2015 அன்று பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கொரடாச்சேரி அருகே மூலங்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜீவா உயிரிந்தார்.

    இதுகுறித்து குடவாசல் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து திருவாரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, விபத்தில் பாதிக்கப்பட்ட ஜீவாவின் மனைவி சுமதி, மகன் அருண், மகள் அருள்தேவி, தாய் அஞ்சம்மாள் ஆகியோரின் எதிர்காலப் பயனைக் கருத்தில் கொண்டு ரூ.25 லட்சம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai