சுடச்சுட

    

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

    By திருவாரூர்  |   Published on : 24th March 2016 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி பாத தரிசனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டத்தைப் போல திருவாத்திரை மற்றும் பங்குனி உத்திரப் பெருவிழாவும் பிரசித்திப் பெற்றது. பங்குனி உத்திரப் பெருவிழா பிப்.24-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. பிப்.26-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, நாள்தோறும் உத்ஸவம் நடைபெற்று வந்தது.

    இவ்விழாவையொட்டி, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு சுவாமி வலது பாதத்தை காண்பித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    இப்பூஜையில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வலது பாதத்தையும் காட்டுவதாகப் பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வலதுபாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் நின்று, பாத தரிசனம் செய்தனர். முன்னதாக, இவ்விழாவையொட்டி தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை மற்றும் மகாஅபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai