சுடச்சுட

    

    பழையவலம் துர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

    By திருவாரூர்,  |   Published on : 24th March 2016 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே பழையவலம் துர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் பழையவலம் கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி, மார்ச் 18-ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 9 மணிக்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு, துர்கா பரமேஸ்வரி சன்னதி கோபுரக் கலசங்கள், விநாயகர், முருகர் சன்னதிகளின் கோபுரக் கலசங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டன. இதையடுத்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்- ஆராதனை நடைபெற்றது.

    இவ்விழாவில் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai