சுடச்சுட

    

    தேர்தல் கூட்டணி குறித்து மார்ச் 26-இல் மனிதநேய ஜனநாயகக் கட்சி அறிவிப்பு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 25th March 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் மார்ச் 26-இல் நடைபெற உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில், தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் தாஜுதீன் முத்துப்பேட்டையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாஜுதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைக் காக்கும் வகையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும்.

    புதிய பாதையில், புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் எங்கள் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு, சென்னையில் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், சோழ மண்டலமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து, கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai