Enable Javscript for better performance
புனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    புனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி

    By திருவாரூர்,  |   Published on : 26th March 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் புனித பாத்திமா ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி, திருவாரூர் பிடாரிக்கோயில் தெருவிலுள்ள பாத்திமா ஆலயம் மற்றும் நேதாஜி சாலை, பனகல் சாலை ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    அப்போது, இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளை நினைவுகூரும் சிலுவைப் பாதை வழிபாடு, சிலுவையை முத்தம் செய்தல், திருப்பலி என மூன்று பகுதிகளாக இந்த வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை காட்சிப்படுத்தும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    புனித பாத்திமா ஆலயப் பங்கு தந்தை சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், பிடாரிக்கோயில் தெருவில் தொடங்கி விருப்பாச்சி தெரு, வடக்கு வீதி வழியாக பாத்திமா ஆலயத்தை வந்தடைந்தது.

    ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி அமைதியாக வந்தனர். இதில், தந்தையர்கள் சதீஷ்சேவியர், தமிழ்ச்செல்வம் மற்றும் ஜான்பீட்டர், ஜார்ஜ் ராபின்சன், ரோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai